/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஜல்லிக்கற்கள் சிதறிய சிறுபாலம் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து ஜல்லிக்கற்கள் சிதறிய சிறுபாலம் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து
ஜல்லிக்கற்கள் சிதறிய சிறுபாலம் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து
ஜல்லிக்கற்கள் சிதறிய சிறுபாலம் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து
ஜல்லிக்கற்கள் சிதறிய சிறுபாலம் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து
ADDED : ஆக 07, 2024 12:56 AM

சென்னை, சென்னை பூந்தமல்லி ஒன்றியம், காட்டுப்பாக்கம் ஊராட்சியில் பாவேந்தர் நகர் உள்ளது. இந்த நகரில், மங்களம் தெரு, திப்பு சுல்தான் தெரு இணையும் பகுதியில் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் கீழ் உள்ள மழைநீர் வடிகால், சாலை மட்டத்தைவிட உயரமாக கட்டப்பட்டுள்ளது. இதனால், மழைக்காலத்தில் சிறுபாலத்தில் தண்ணீர் செல்லாமல், சாலையில் வழிந்தோடும் நிலை உள்ளது.
மேலும், காட்டுப்பாக்கம், மாங்காடு, பரணிபுத்துார் ஆகிய பகுதியைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், சிறுபாலம் வழியே பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள இரு தனியார் பள்ளிகள், ஆறு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் இவ்வழியே செல்கின்றனர்.
இந்நிலையில், சிறுபாலம் கட்டப்பட்ட இடத்தில் சாலை அமைக்காமல், ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளன.
இதனால், சைக்கிள் மற்றும் பைக்கில் செல்வோர் தவறி விழுந்து காயமடைகின்றனர். பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன், காட்டுப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சாலை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.