/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'கேட்' பூட்டு உடைத்து நகை, பைக் திருட்டு 'கேட்' பூட்டு உடைத்து நகை, பைக் திருட்டு
'கேட்' பூட்டு உடைத்து நகை, பைக் திருட்டு
'கேட்' பூட்டு உடைத்து நகை, பைக் திருட்டு
'கேட்' பூட்டு உடைத்து நகை, பைக் திருட்டு
ADDED : ஜூன் 22, 2024 04:58 PM
புழல்:
புழல் அடுத்த விநாயகபுரம், உமாபதி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 38; தனியார் நிறுவன ஊழியர்.
இவர், மூன்று நாட்களுக்கு முன், குடும்பத்துடன் வெளியூர் சென்ற இவர், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.
இந்த நிலையில், வீட்டின் கிரில் 'கேட்' மற்றும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 1 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் டி.வி.எஸ்., விக்டர் பைக் உள்ளிட்டவை திருடு போனது தெரிந்தது. புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.