/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சாலை நடுவில் குப்பை தொட்டி மரண பீதியில் வாகன ஓட்டிகள் சாலை நடுவில் குப்பை தொட்டி மரண பீதியில் வாகன ஓட்டிகள்
சாலை நடுவில் குப்பை தொட்டி மரண பீதியில் வாகன ஓட்டிகள்
சாலை நடுவில் குப்பை தொட்டி மரண பீதியில் வாகன ஓட்டிகள்
சாலை நடுவில் குப்பை தொட்டி மரண பீதியில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 17, 2024 02:12 AM

ஆவடி:ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், வைஷ்ணவி நகர் பிரதான சாலை நடுவில் நான்கு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. சாலையோரத்தில் போதுமான இடம் இருந்தும், சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து புகார் தெரிவித்தும் ஆவடி மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை.
இதனால், சாலை சுருங்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், குப்பை கழிவுகளில் உணவு தேடி கால்நடைகள் வருவதால், எந்நேரமும் விபத்து அபாயத்தில் மரண பீதியில் வாகன ஓட்டிகள் பயணிக்கின்றனர்.
அதேபோல, குப்பையை சரியாக அப்புறப்படுத்தாமல் உள்ளதால், குப்பைத் தொட்டி நிரம்பி வழிந்து, சாலையில் சிதறி கிடக்கிறது.
இதனால் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், அங்குள்ள குப்பை தொட்டிகளை இடம் மாற்றி வைத்து, குப்பை கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.