/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இளைஞர் அடித்து கொலை ரவுடி கும்பல் கைது இளைஞர் அடித்து கொலை ரவுடி கும்பல் கைது
இளைஞர் அடித்து கொலை ரவுடி கும்பல் கைது
இளைஞர் அடித்து கொலை ரவுடி கும்பல் கைது
இளைஞர் அடித்து கொலை ரவுடி கும்பல் கைது
ADDED : ஆக 02, 2024 12:17 AM
அம்பத்துார் அம்பத்துார், ஐ.சி.எப்., காலனியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 23. இவர், கடந்த 30ம் தேதி இரவு, 8:00 மணியளவில், அயப்பாக்கம் ஏரிக்கரையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அவரது மனைவி, அம்பத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை, அயப்பாக்கம் ஏரியில் ஆண் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின்படி, அம்பத்துார் போலீசார் சென்று பார்த்ததில், அது காணாமல் போன ராஜேஷ் என தெரிந்தது. உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதையடுத்து, சந்தேகத்தின்படி அவரது நண்பர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், சம்பவத்தன்று, போதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ராஜேஷை கொலை செய்து, அயப்பாக்கம் ஏரியில் வீசியது தெரிந்தது.
இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளான, அண்ணாநகர் மேற்கைச் சேர்ந்த மூர்த்தி, 32, அயப்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன், 27, உட்பட ஏழு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.