/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மீன் பண்ணை மேலாளரை வெட்டிக் கொன்ற ஊழியர் தங்கையை ஆபாசமாக பேசியதால் ஆத்திரம் மீன் பண்ணை மேலாளரை வெட்டிக் கொன்ற ஊழியர் தங்கையை ஆபாசமாக பேசியதால் ஆத்திரம்
மீன் பண்ணை மேலாளரை வெட்டிக் கொன்ற ஊழியர் தங்கையை ஆபாசமாக பேசியதால் ஆத்திரம்
மீன் பண்ணை மேலாளரை வெட்டிக் கொன்ற ஊழியர் தங்கையை ஆபாசமாக பேசியதால் ஆத்திரம்
மீன் பண்ணை மேலாளரை வெட்டிக் கொன்ற ஊழியர் தங்கையை ஆபாசமாக பேசியதால் ஆத்திரம்
ADDED : ஜூலை 03, 2024 12:13 AM

ஆவடி, ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு, ஜெய்சக்தி நகரில் உள்ள அலங்கார மீன்கள் வளர்க்கும் பண்ணையில் தங்கி, மேற்பார்வையாளராக பணிபுரிந்தவர் மணிகண்டன், 26. இவர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்.
இவருடன், திண்டுக்கல், நிலக்கோட்டையைச் சேர்ந்த கண்ணபிரான், 18, என்பவர் பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் இருவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று காலை மீன் பண்ணை உரிமையாளர் தங்கராஜ் வந்து பார்த்தபோது, தலை மற்றும் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன், மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
தகவலறிந்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் அன்பழகன் தலைமையிலான தனிப்படை போலீசாரின் விசாரணையில், கொலை செய்துவிட்டு கண்ணபிரான் தலைமறைவானது தெரிய வந்தது. ஆரிக்கம்பேடு, ஏரிக்கரை பகுதியில் பதுங்கி இருந்த கண்ணபிரானை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்:
எனக்கு தாய் இல்லாததால், மாற்றுத்திறனாளி தந்தை மற்றும் பள்ளியில் படிக்கும் 15 வயது தங்கையுடன் நிலக்கோட்டையில் வசித்து வருகிறேன். தங்கைக்காகத் தான், சென்னைக்கு வந்து வேலை செய்கிறேன்.
மணிகண்டன், தினமும் என்னை அடித்து துன்புறுத்தி வந்தார். மது போதையில் என் தங்கை பற்றி தகாத வார்த்தைகளால் பேசுவார். அதை பொறுத்துக் கொண்டு வேலை செய்து வந்தேன்.
வழக்கம்போல் நேற்று முன்தினம் மது அருந்தும்போது, மணிகண்டன் கத்தியைக் காட்டி மிரட்டினார். பின், என் மொபைல் போனில் என் தங்கையை அழைத்து, தகாத வார்த்தையில் ஆபாசமாக பேசினார்.
என் தங்கைக்காக வாழ்ந்து வரும் என்னால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால், ஆத்திரத்தில் மணிகண்டனை கொலை செய்தேன்.
இவ்வாறு கண்ணபிரான் வாக்குமூலம் அளித்தார்.
விசாரணைக்குப் பின், ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், கண்ணபிரானை கைது செய்து விசாரிக்கின்றனர்.