/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச கண்புரை பரிசோதனை 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச கண்புரை பரிசோதனை
50 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச கண்புரை பரிசோதனை
50 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச கண்புரை பரிசோதனை
50 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச கண்புரை பரிசோதனை
ADDED : ஜூன் 08, 2024 12:34 AM
சென்னை, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், 50 வயது மேற்பட்டோருக்கு, இலவசமாக கண்புரை பரிசோதனை மேற்கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மருத்துவமனையின் பிராந்திய தலைவர் சவுந்தரி கூறியதாவது:
நீரிழிவு நோயாளிகளிடம், பார்வைத்திறன் இழப்பு முக்கிய காரணங்களில் ஒன்றாக கண்புரை நோய் இருக்கிறது. கண்புரை அறுவை சிகிச்சை செய்வோரில், 20 சதவீதம் பேர் நீரிழிவு நோயாளிகளாக உள்ளனர்.
இம்மாதம் கண்புரை குறித்த விழிப்புணர்வு மாதமாக இருப்பதால், சென்னையில் அனைத்து, அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், 50 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு, வரும் 30ம் தேதி வரை இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதற்கு, 95949 01868 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கண்புரை பரிசோதனை செய்து கொள்வதன் வாயிலாக பார்வை இழப்பை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.