பீடி தராத டிரைவரின் மண்டை உடைப்பு
பீடி தராத டிரைவரின் மண்டை உடைப்பு
பீடி தராத டிரைவரின் மண்டை உடைப்பு
ADDED : ஜூன் 25, 2024 12:42 AM
எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்., நகர், ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி, 57; ஆட்டோ டிரைவர்.
நேற்று இவர் வியாசர்பாடி, முல்லை நகர், 82வது 'பிளாக்' அருகில் நின்ற போது, அவ்வழியே வந்த மர்ம நபர், குப்புசாமியிடம் பீடி கேட்டுள்ளார்.
அவர் இல்லையெனக் கூறியதால், ஆத்திரமடைந்த மர்ம நபர், கல்லால் குப்புசாமியின் தலையில் தாக்கி விட்டு தப்பினார். படுகாயமடைந்த குப்புசாமியை அங்கிருந்தோர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்த புகாரை விசாரித்த எம்.கே.பி.நகர் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட, பழைய குற்றவாளியான வியாசர்பாடி, நான்காவது இணைப்பு சாலையைச் சேர்ந்த ரவுடி வினோத், 28, என்பவரை கைது செய்தனர்.