/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முன்னாள் ரயில்வே அதிகாரி பள்ளி வேன் மோதி பலி முன்னாள் ரயில்வே அதிகாரி பள்ளி வேன் மோதி பலி
முன்னாள் ரயில்வே அதிகாரி பள்ளி வேன் மோதி பலி
முன்னாள் ரயில்வே அதிகாரி பள்ளி வேன் மோதி பலி
முன்னாள் ரயில்வே அதிகாரி பள்ளி வேன் மோதி பலி
ADDED : ஆக 02, 2024 12:15 AM
பள்ளிக்கரணை,
சென்னை, பள்ளிக்கரணை, கணபதி நகரை சேர்ந்தவர் குணாளன், 68. இவர் ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தாம்பரத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலை பணிக்கு செல்வதற்காக, வேளச்சேரி- - தாம்பரம் பிரதான சாலையில், சிவன் கோவில் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, வேளச்சேரியில் இருந்து மேடவாக்கம் நோக்கி பள்ளி மாணவர்களுடன் சென்ற தனியார் வேன், குணாளன் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விபத்தை ஏற்படுத்தி தலைமறைவான வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.