/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சதுரங்கப்பட்டினத்தில் தீ; 150 மரங்கள் கருகின சதுரங்கப்பட்டினத்தில் தீ; 150 மரங்கள் கருகின
சதுரங்கப்பட்டினத்தில் தீ; 150 மரங்கள் கருகின
சதுரங்கப்பட்டினத்தில் தீ; 150 மரங்கள் கருகின
சதுரங்கப்பட்டினத்தில் தீ; 150 மரங்கள் கருகின
ADDED : ஜூன் 03, 2024 02:32 AM

புதுப்பட்டினம்:செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் - புதுச்சேரி சாலை பகுதியில், சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தை ஒட்டியுள்ள அரசு நிலத்தில், சிறியளவில் பனைமரங்கள் உள்ளன.
அதே பகுதியில், புதரும் வளர்ந்து வெயிலில் காய்ந்திருந்தன. நேற்று மதியம் 2:00 மணிக்கு, புதரில் தீப்பற்றியது.
பனை மரங்களிலும் தீ பரவி, 150க்கும் மேற்பட்ட மரங்கள் கருகின. புதுச்சேரி சாலையில் புகை பரவி, வாகனத்தில் சென்றோர் திணறினர்.
கல்பாக்கம், மத்திய தொழிலக பாதுகாப்பு படையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், மாநில தீயணைப்பு வீரர்கள், அரைமணி நேரத்திற்கும் மேல் தண்ணீரை பீய்ச்சி, மேலும் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்.