/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆபத்தான பழைய பாலம் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு ஆபத்தான பழைய பாலம் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
ஆபத்தான பழைய பாலம் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
ஆபத்தான பழைய பாலம் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
ஆபத்தான பழைய பாலம் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 26, 2024 12:15 AM

படப்பை, மணிமங்கலம் - கரசங்கால் சாலையில் உள்ள பழைய பாலத்தை இடித்து அகற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே மணிமங்கலம் - கரசங்கால் நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலையில், கரசங்கால் பகுதியில் மணிமங்கலம் ஏரியின் உபரிநீர் செல்லும் கால்வாய் குறுக்கே பாலம் உள்ளது.
இந்த பாலம் சேதமடைந்ததால், அதன் அருகே புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு, 6 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், பழைய பாலத்தை இடித்து அகற்றாமல், அப்படியே விட்டுள்ளனர். இந்த பழைய பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
ஆபத்தை உணராமல், இந்த பாலத்தின் மீது கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், இந்த பழைய பாலத்தை இடித்து அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.