/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் திருமுடிவாக்கத்தில் உற்சாகம் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் திருமுடிவாக்கத்தில் உற்சாகம்
அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் திருமுடிவாக்கத்தில் உற்சாகம்
அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் திருமுடிவாக்கத்தில் உற்சாகம்
அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் திருமுடிவாக்கத்தில் உற்சாகம்
ADDED : ஜூன் 09, 2024 01:32 AM

குன்றத்துார்:'தினமலர்' நாளிதழ் சார்பில் நடந்த 'ஆட்டம், பாட்டம், அப்பார்ட்மெண்ட் கொண்டாட்டம்' நிகழ்ச்சியில், குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம் 'ராயல் காஸ்டல்' அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழும் வகையில் 'டாய்' ரயில், ஜம்பிங் பலுான், வாட்டர் மார்க் பெயின்ட், கோல்ப், கேலி சித்திரம், ஓவியம், மேஜிக் ஷோ, ஆடல், பாடல்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. அனைத்து வயதினருக்கான பலவகை போட்டிகளும் நடத்தப்பட்டன.
இதில் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் குடும்பத்துடன் உற்சாகமாக பங்கேற்று மகிழ்ந்தனர்.
நேற்று அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஜீவா செந்தில்குமார், --சாந்தி தம்பதியரின் 18ம் ஆண்டு திருமண நாள் விழா மற்றும் அஷ்வின் என்ற சிறுவனின் ஐந்தாம் ஆண்டு பிறந்த நாள் என்பதால், அவர்களுக்கு நிகழ்ச்சியின் போது தனித்தனியே கேக் வெட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ராயல் காஸ்டல் அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்க தலைவர், எஸ்.வைத்தியநாதன், 59, கூறுகையில், ''தினமலர் ஆட்டம் பாட்டம் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழச்சி மிக அருமையாக இருந்தது.
கோவிட் தொற்றுக்கு பின், இந்த மாதிரி கொண்டாட்டத்தை சில ஆண்டுகளாக பார்க்கவில்லை. குடியிருப்புவாசிகளை உற்சாகமடைய செய்தது,'' என்றார்.- -
தினமலர் ஆட்டம் பாட்டம் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழச்சி மிக அருமையாக இருந்தது. கோவிட் தொற்றுக்கு பின், இந்த மாதிரி கொண்டாட்டத்தை சில ஆண்டுகளாக பார்க்கவில்லை. இந்த கொண்டாட்டம், எங்கள் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளை உற்சாகமடைய செய்தது.- - எஸ்.வைத்தியநாதன்,59. ராயல் காஸ்டல் -அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்க தலைவர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் புத்துணர்ச்சியை அளித்துள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சியை வரவேற்கிறோம். எனது திருமண நாளில் 'தினமலர்' கொண்டாட்ட விழாவில் கேக் வெட்டியது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
- ஜே.ஜீவாசெந்தில்குமார்
தினமலர் ஆட்டம் பாட்டம் கொண்டாட்ட நிகழ்ச்சியால் எங்கள் குடியிருப்பை சேர்ந்த சிறியவர்கள், முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியாக இருந்தோம். பரபரப்பான வாழ்வில் இதுபோன்ற நிகழ்ச்சி புத்துணர்ச்சியாக இருந்தது.
-எஸ்.தீபா, அடுக்குமாடி குடியிருப்பு வாசி
எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் இதற்கு முன், பணம் செலவழித்து விழா நடத்தினோம். தற்போது 'தினமலர்' இலவசமாக இந்த கொண்டாட்ட விழாவை நடத்தியுள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்களை ஏற்படுத்தியது மகிழ்ச்சியாக இருந்தது.
- பி.ஸ்ரீலலிதா