Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மஞ்சளாக மாறும் எண்ணுார் முகத்துவாரம் அரசின் அலட்சியத்தால் தொடரும் அவலம்

மஞ்சளாக மாறும் எண்ணுார் முகத்துவாரம் அரசின் அலட்சியத்தால் தொடரும் அவலம்

மஞ்சளாக மாறும் எண்ணுார் முகத்துவாரம் அரசின் அலட்சியத்தால் தொடரும் அவலம்

மஞ்சளாக மாறும் எண்ணுார் முகத்துவாரம் அரசின் அலட்சியத்தால் தொடரும் அவலம்

ADDED : ஜூலை 13, 2024 12:50 AM


Google News
Latest Tamil News
எண்ணுார், ஆற்றின் நன்னீரும், கடலின் உப்பு நீரும் கலக்கும் முகத்துவாரம், கழிமுகம் மற்றும் அலையாத்தி காடுகள் நிறைந்த பகுதிகளில், இறால், நண்டு, கொடுவா உள்ளிட்ட மீன் வகைகள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடமாகும்.

அந்த வகையில், எண்ணுார் முகத்துவாரம் 8,000த்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

இந்த நிலையில், வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியான சாம்பல் கழிவு மற்றும் சுடுநீரால் முகத்துவாரம் மற்றும் கழிமுகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது மஞ்சள் நிறத்திலான கழிவுகள் மற்றும் பல வண்ணங்களில் படரும் ரசாயன கழிவுகளால், மீன்வளம் கடுமையாக பாதிக்கும் சூழல் உள்ளது.

இந்தாண்டில் மட்டும், ஐந்து முறைக்கு மேல் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சமீபத்தில் நம் நாளிதழ் சுட்டிக்காட்டியது. அதைத்தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு, மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், இது தொடர்பாக எந்த முடிவும் தெரியவில்லை. இதனால் எட்டு மீனவ கிராமத்தினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.

அரசின் அவலமே, இப்பிரச்னைகளுக்கு காரணம் என, மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வாரியத்திற்கு கேள்வி

ஆற்றில் மஞ்சள் கழிவுகள் கலக்கும் விவகாரத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வுக்கு எடுத்துச்சென்ற மாதிரிகளின் முடிவுகளும் தெரியவில்லை. வாரியம், தனியார் துறைகளுக்கு சாதகமாக செயல்படுகிறது. சமீபத்தில் வந்த நிறுவனத்தால், இந்த பிரச்னை ஏற்படுவதாக எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. அதை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுப்படுத்த வேண்டும்.

இ.குமரவேல், 42; மீனவர், நெட்டுகுப்பம், எண்ணுார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us