/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அத்துமீறி குவிக்கப்படும் குப்பை நியூ ஆவடி சாலையில் அட்டூழியம் அத்துமீறி குவிக்கப்படும் குப்பை நியூ ஆவடி சாலையில் அட்டூழியம்
அத்துமீறி குவிக்கப்படும் குப்பை நியூ ஆவடி சாலையில் அட்டூழியம்
அத்துமீறி குவிக்கப்படும் குப்பை நியூ ஆவடி சாலையில் அட்டூழியம்
அத்துமீறி குவிக்கப்படும் குப்பை நியூ ஆவடி சாலையில் அட்டூழியம்
ADDED : ஜூன் 25, 2024 12:31 AM

அண்ணா நகர், கிழக்கு அண்ணா நகர் உட்பட நியூ ஆவடி சாலையோரத்தில் அத்துமீறி கொட்டப்படும் குப்பையால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
சென்னை, அண்ணா நகர் மண்டலத்தில் வில்லிவாக்கம் - கீழ்ப்பாக்கம் வரை நியூ ஆவடி சாலை உள்ளது. இங்கு ஒரு புறத்தில், வில்லிவாக்கத்தில் இருந்து, ஐ.சி.எப்., மற்றும் அண்ணா நகர், அயனாவரம், கீழ்ப்பாக்கம் நோக்கி செல்லும் பாதையும், மற்றொருபுறத்தில் அண்ணா நகரில் இருந்து வில்லிவாக்கம், பாடியை நோக்கி செல்லும் இரு பாதைகள் உள்ளன.
இதில், பாடியை நோக்கி செல்லும் பாதையின் சாலையோரம், ஐ.சி.எப்., ரயில்வேக்கும், வில்லிவாக்கம் - கீழ்ப்பாக்கம் நோக்கி செல்லும் சாலையோரம் குடிநீர் வாரியத்திற்கும் சொந்தமான இடங்கள் உள்ளன.
இந்த இருபுறங்களில் உள்ள சாலையோரங்களில், பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு இருப்பதால், சாலை சுருங்கி, காலையும் மாலையும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.
அதேபோல், இருபுறங்களிலும் சாலையோரங்களில் அத்துமீறி குப்பை கொட்டப்படுகிறது. குறிப்பாக, கிழக்கு அண்ணா நகர் பகுதியில் உள்ள குடிநீர் வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில், சாலையோரத்தில் சிலர் அத்துமீறி குப்பையை கொட்டி வருகின்றனர்.
இதனால், சாலை முழுதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அதே இடத்தில் பல நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடக்கின்றன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, குப்பையை அகற்றி, குடிநீர் வாரிய இடத்தில் தடுப்பு அமைக்க நடவடிக்கை வேண்டும். அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களையும் அகற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.