/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தனியார் பள்ளி வாகனங்களால் நெரிசல் பணியாளர் நியமித்து ஒழுங்குபடுத்த வலியுறுத்தல் தனியார் பள்ளி வாகனங்களால் நெரிசல் பணியாளர் நியமித்து ஒழுங்குபடுத்த வலியுறுத்தல்
தனியார் பள்ளி வாகனங்களால் நெரிசல் பணியாளர் நியமித்து ஒழுங்குபடுத்த வலியுறுத்தல்
தனியார் பள்ளி வாகனங்களால் நெரிசல் பணியாளர் நியமித்து ஒழுங்குபடுத்த வலியுறுத்தல்
தனியார் பள்ளி வாகனங்களால் நெரிசல் பணியாளர் நியமித்து ஒழுங்குபடுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூலை 25, 2024 12:29 AM
சென்னை,ஓ.எம்.ஆரில், மத்திய கைலாஷ் முதல் செம்மஞ்சேரி வரை உள்ள உட்புற சாலைகளில், 25க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன.
பெரும்பாலான பிள்ளைகளை, தங்களின் வாகனங்களில் பெற்றோர்களே அழைத்து வந்து பள்ளியில் விடுகின்றனர். ஏராளமான மாணவர்கள் வாடகை மற்றும் பள்ளி வாகனங்களில் வருகின்றனர்.
இதனால், பள்ளிகள் உள்ள உட்புற சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதர வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றன. இந்நிலையில், சில பள்ளிகளின் நிர்வாகம் சார்பில் காலை, மாலை நேரத்தில் வாகனங்களை ஒழுங்குப்படுத்த, போக்குவரத்து போலீசார் நியமிக்கக்கேட்டுள்ளனர்.
இதன்படி, சில பள்ளிகளுக்கு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதையே பின்பற்றி மற்ற பள்ளிகளின் நிர்வாகங்களும், வாகனங்களை ஒழுங்குபடுத்த போலீசார் உதவி கேட்பதால், அதிகாரிகள் திணறுகின்றனர்.
பள்ளிகளுக்காக வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசாரை ஈடுபடுத்தினால், ஓ.எம்.ஆரில் மெட்ரோ பணியால் ஏற்படும் நெரிசலை ஒழுங்குபடுத்த முடியாத நிலை ஏற்படும் என, அவர்கள் கூறினர்.
போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
மெட்ரோ ரயில் பணியால், ஆறுவழிச்சாலை நான்கு வழியாக உள்ளது. போக்குவரத்து மாற்றத்தால், வாகனங்களின் வேகம் குறைந்து, 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், வாகன நெரிசல் அதிகரிக்கிறது. பேருந்து சாலையில் உள்ள அரசு பள்ளிகள் மாணவ - மாணவியர் சாலையைக் கடக்க உதவுகிறோம்.
உட்புற சாலையில் உள்ள அரசு பள்ளிகளின் அருகில் நெரிசல் ஏற்பட்டால், பள்ளி நிர்வாகமே ஊழியர் நியமித்து சரி செய்து விடும். ஆனால், தனியார் பள்ளிகள் போலீசாரின் உதவியை கேட்கின்றனர். பிரதான சாலை நெரிசலை ஒழுங்குபடுத்தவே, போதிய போலீசார் இல்லை.
அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் போலீசார் நியமிக்க முடியாது. இதனால், தனியார் பள்ளி நிர்வாகமே பணியாளர்களை நியமித்து, பள்ளிக்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.