/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இ.எம்.ஐ., கட்ட முடியாமல் பைக்கை எரித்த வாலிபர் இ.எம்.ஐ., கட்ட முடியாமல் பைக்கை எரித்த வாலிபர்
இ.எம்.ஐ., கட்ட முடியாமல் பைக்கை எரித்த வாலிபர்
இ.எம்.ஐ., கட்ட முடியாமல் பைக்கை எரித்த வாலிபர்
இ.எம்.ஐ., கட்ட முடியாமல் பைக்கை எரித்த வாலிபர்
ADDED : ஜூன் 17, 2024 01:31 AM
ஆவடி:ஆவடி பருத்திப்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாசிலா, 65; ஆட்டோ டிரைவர். இவரது மகன் முகேஷ், 33, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். இவர், நேற்று மதியம் மதுபோதையில், இருசக்கர வாகனம் வாங்கியதற்கான, இ.எம்.ஐ., எனும் மாத தவணை செலுத்த, பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார்.
அவர்கள் பணம் தராததால் ஆத்திரமடைந்த முகேஷ், தன் 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கை, பருத்திப்பட்டு அருகே சாலையில் நிறுத்தி, பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளார்.
தகவலின்படி வந்த ஆவடி தீயணைப்பு துறையினர், 10 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பைக் தீக்கிரையானது. முகேஷை கைது செய்த ஆவடி போலீசார், அவரிடம் விசாரிக்கின்றனர்.