/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மணலி டி.பி.எல்., ஆலையில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை மணலி டி.பி.எல்., ஆலையில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை
மணலி டி.பி.எல்., ஆலையில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை
மணலி டி.பி.எல்., ஆலையில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை
மணலி டி.பி.எல்., ஆலையில் அவசரகால பாதுகாப்பு ஒத்திகை
ADDED : ஜூலை 19, 2024 12:37 AM
சென்னை, மணலியில் உள்ள டி.பி.எல்.,எனப்படும் தமிழ்நாடு பெட்ரோபுராடக்ஸ் தொழிற்சாலையில், குளோரின் வாயு கசிந்ததால் தொழிலாளர்கள், சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் எம்.வி.செந்தில்குமார் ஒத்திகை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். டி.பி.எல்., நிறுவன இயக்குனர் செந்தில்குமார் உள்ளிட்டோர் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருவாய், காவல், தீயணைப்பு, தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட அரசு துறைகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.
மூன்று அவசரகால மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் ஒத்திகை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கட்டா ரவிதேஜா, அவசரகால பாதுகாப்பு ஒத்திகையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார்.
திருவொற்றியூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் கார்த்திகேயன் பேசும்போது, 'தொழிற்சாலைகளில் மிகப்பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும்போது, அரசு துறைகள் அனைத்தும் தங்களுக்குரிய கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். அதை மதிப்பீடு செய்யவே பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது' என்றார்.