/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கோயம்பேடு சந்தையில் எட்டு கடைகளுக்கு 'சீல்' கோயம்பேடு சந்தையில் எட்டு கடைகளுக்கு 'சீல்'
கோயம்பேடு சந்தையில் எட்டு கடைகளுக்கு 'சீல்'
கோயம்பேடு சந்தையில் எட்டு கடைகளுக்கு 'சீல்'
கோயம்பேடு சந்தையில் எட்டு கடைகளுக்கு 'சீல்'
ADDED : ஜூன் 19, 2024 12:14 AM
கோயம்பேடு, ஜூன் 19--
கோயம்பேடு சந்தையில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் அங்காடி நிர்வாகக் குழு அதிகாரிகள், சமீபத்தில் சோதனை செய்தனர். இதில், எத்திலின் எனும் ரசாயனம் வாயிலாக வாழைக்காய்களை செயற்கையாக பழுக்க வைத்து, விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, செயற்கையாக வாழைக்காய்களை பழுக்க வைத்த எட்டு கடைகளுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
அவர்கள், இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடமாட்டோம் என, எழுதிக் கொடுத்ததுடன், கடைக்கு தலா 5,000 ரூபாய் அபராதம் கட்டிய பின், கடைகளின் சீல் அகற்றப்பட்டது.
செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பது தொடர்ந்து நடப்பதால், உணவு பாதுகாப்பு துறை, அங்காடி நிர்வாக குழு மற்றும் மாநகராட்சி இணைந்து, தனிக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.