/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அம்பேத்கர் சாலையில் வேகமெடுத்த வடிகால் பணி அம்பேத்கர் சாலையில் வேகமெடுத்த வடிகால் பணி
அம்பேத்கர் சாலையில் வேகமெடுத்த வடிகால் பணி
அம்பேத்கர் சாலையில் வேகமெடுத்த வடிகால் பணி
அம்பேத்கர் சாலையில் வேகமெடுத்த வடிகால் பணி
ADDED : ஜூன் 10, 2024 02:17 AM

மடிப்பாக்கம்:சென்னை, பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கத்தில், அம்பேத்கர் சாலை அமைந்துள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து பெரியார் நகர், குபேரன் நகர், ராஜலட்சுமி நகர், லட்சுமி நகர், காகிதபுரம், கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு கொளத்துார் செல்லும் பிரதான வழித்தடமாக இச்சாலை விளங்குகிறது.
தினசரி ஆயிரக்கணக்கான இரு, நான்கு சக்கர வாகனங்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றன. கடந்த சில மாதங்களாக, மடிப்பாக்கத்தில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன.
மடிப்பாக்கம் பேருந்து நிலைய ஆவின் 'பூத்'தில் இருந்து குணாலம்மன் கோவில் வரை, அம்பேத்கர் சாலை மிகவும் குறுகலாக காணப்படும்.
குணாலம்மன் கோவில் அருகில் மழைநீர் வடிகாலுக்காக, கடந்த மாதம் சாலை தோண்டப்பட்டது.
அதன் பிறகு, எந்த பணியும் நடக்கவில்லை. இந்த பள்ளத்தால் அச்சாலையில் காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இது குறித்து நம் நாளிதழில், படத்துடன் கூடிய செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி வேகம் பெற்றுள்ளது.