/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கலங்கல், துர்நாற்றம் வீசும் குடிநீர் அடையாறு, பெசன்ட் நகரில் சப்ளை குடிக்க, சமைக்க மக்களிடையே அச்சம் கலங்கல், துர்நாற்றம் வீசும் குடிநீர் அடையாறு, பெசன்ட் நகரில் சப்ளை குடிக்க, சமைக்க மக்களிடையே அச்சம்
கலங்கல், துர்நாற்றம் வீசும் குடிநீர் அடையாறு, பெசன்ட் நகரில் சப்ளை குடிக்க, சமைக்க மக்களிடையே அச்சம்
கலங்கல், துர்நாற்றம் வீசும் குடிநீர் அடையாறு, பெசன்ட் நகரில் சப்ளை குடிக்க, சமைக்க மக்களிடையே அச்சம்
கலங்கல், துர்நாற்றம் வீசும் குடிநீர் அடையாறு, பெசன்ட் நகரில் சப்ளை குடிக்க, சமைக்க மக்களிடையே அச்சம்
ADDED : ஜூன் 17, 2024 01:39 AM
அடையாறு:சென்னையில் தினமும், 100 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீர், வீராணம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் மற்றும் கடல்நீர் குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து வினியோகிக்கப்படுகிறது.
சில பகுதிகளில், குடிநீர் கலங்கலாகவும், துர்நாற்றம் வீசியும் வருவதாக புகார் எழுகிறது. குறிப்பாக, அடையாறு மண்டலத்தில், இந்திரா நகர், காந்தி நகர், கஸ்துாரிபாய் நகர், பெசன்ட் நகர், சாஸ்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளில், குடிநீர் கலங்கலாக வினியோகிக்கப்படுகிறது.
இதனால், குடிக்க, சமைக்க உள்ளிட்ட தேவைக்கு, குழாயில் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்த மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் வினியோகிப்பதால், வீட்டு தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து, பகுதிமக்கள் கூறியதாவது:
கடந்த மாதம், குடிநீர் நன்றாக வந்தது. ஒரு வாரமாக, நிறம் மாறி கலங்கலாக வருகிறது; துர்நாற்றமும் வீசுகிறது.
காய்ச்சி குடித்தாலும் துர்நாற்றம் மாறவில்லை. இதனால், கேன் குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
குளித்து சோப்பு போட்டாலும், உடம்பில் துர்நாற்றம் மாறவில்லை. பல நோய்கள் வர குடிநீரும் ஒரு காரணமாக உள்ளது.
வாரியம், சுத்தமாக வழங்கும் என்ற நம்பிக்கையில் குடிநீரை பயன்படுத்துகிறோம். நம்பிக்கைக்கு பாத்திரமாக, சுகாதாரமான குடிநீர் வழங்குவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
அடையாறு பகுதிக்கு, கடல்நீர் குடிநீராக்கும் நிலையத்தில் இருந்தும், செம்பரம்பாக்கம் ஏரி குடிநீரும் வழங்கி வந்தோம்.
கடந்த மாதம் முதல், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி நடந்ததால், செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரியிலிருந்து குடிநீர் வழங்கி வருகிறோம்.
கடல்நீரை குடிநீராக்கும்போது குடிநீரின் வெண்மை அதிகமாக இருக்கும். ஏரி குடிநீரில் அதுபோன்ற வெண்மை இருக்காது. சுத்திகரித்து வினியோகிப்பதால், நோய் பாதிப்பு ஏற்படாது. மழை நேரத்தில், காய்ச்சி குடிக்க வேண்டும். துர்நாற்றம் வீசும் புகார் குறித்து விசாரிக்கிறோம்.
வடிகால், கால்வாய், மெட்ரோ ரயில் பணியால் சில பகுதிகளில், குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீர் கலங்கலாக வந்தது. அதை கண்டறிந்து சீரமைத்து வருகிறோம்.
அடையாறு, பெசன்ட் நகர் பகுதிகளில் வினியோகிக்கும் குடிநீர் குழாய்களில், கழிவுநீர் கலக்கிறதா என ஆய்வு செய்கிறோம்.
அடையாறு மண்டலத்தில், ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இன்று முதல் தினமும் சீராக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.