/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குடும்பத்தை இழந்தவர் நாடு திரும்புவதில் தாமதம் குடும்பத்தை இழந்தவர் நாடு திரும்புவதில் தாமதம்
குடும்பத்தை இழந்தவர் நாடு திரும்புவதில் தாமதம்
குடும்பத்தை இழந்தவர் நாடு திரும்புவதில் தாமதம்
குடும்பத்தை இழந்தவர் நாடு திரும்புவதில் தாமதம்
ADDED : ஜூன் 24, 2024 02:00 AM
திருவொற்றியூர்:திருவொற்றியூர், திருநகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் முருகன், 50; ஓமன் நாட்டில் கிரேன் ஆப்பரேட்டராக பணிபுரிகிறார். இவரது மனைவி பத்மா, 45. மகன்கள் நித்தேஷ், 21, சஞ்சய், 14.
நித்தேஷ், 14 பாடங்களில் அரியர் வைத்ததாக, தாய் பத்மா கண்டித்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நித்தேஷ், திட்டம் தீட்டி, 20ம் தேதி, தாய் மற்றும் தம்பி சஞ்சய் ஆகியோரை, கொலை செய்து விட்டார்.
திருவொற்றியூர் போலீசார், நேற்று முன்தினம் காலை நித்தேஷை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நித்தேஷ், நேற்று முன்தினம் இரவு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, மனைவி, மகன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து, ஓமன் நாட்டில் இருந்து சென்னை திரும்ப முயற்சித்த முருகன், பாஸ்போர்ட் புதுப்பிக்காமல் இருந்துள்ளார்.
பின், நடந்த சம்பவத்தை கூறியதால், அங்குள்ள அதிகாரிகள் பாஸ்போர்ட் புதுப்பிக்க உதவியுள்ளனர். இருப்பினும், டிக்கெட் கிடைக்காததால், அவர் சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்று, சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதால், உடலை பெறுவதற்கு அவகாசம் கோரியுள்ளதாக, உறவினர் ஒருவர் தெரிவித்தார்.