/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாமியார் திட்டியதால் மருமகள் தீக்குளிப்பு மாமியார் திட்டியதால் மருமகள் தீக்குளிப்பு
மாமியார் திட்டியதால் மருமகள் தீக்குளிப்பு
மாமியார் திட்டியதால் மருமகள் தீக்குளிப்பு
மாமியார் திட்டியதால் மருமகள் தீக்குளிப்பு
ADDED : ஜூன் 02, 2024 12:19 AM
புளியந்தோப்பு புளியந்தோப்பு, வ.உ.சி., நகரைச் சேர்ந்த பாலாஜி என்பவரின் மனைவி கற்பகம், 24. இவருக்கு 2021ல் திருமணம் ஆனது. வீட்டிலேயே கற்பகம், மளிகை கடை நடத்தி வர, கணவர் பாலாஜி சமையல் மற்றும் மேடை அலங்கார வேலை செய்து வந்துள்ளார்.
வீட்டில் தம்பதியருடன் மாமியார் அன்னலட்சுமி, மைத்துனர் சீனிவாசன் ஆகியோரும் ஒன்றாக வசிக்கின்றனர். குடும்பப் பிரச்னையில், கற்பகத்தையும் பாலாஜியையும் அன்னலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த கற்பகம், நேற்று முன்தினம் மாலை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அலறல் சத்தம் கேட்டு சென்ற பாலாஜி, கற்பகத்தை மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 40 சதவீத தீக்காயங்களுடன் கற்பகம் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.