/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கைக்கு எட்டும் மின் கம்பிகள் புழுதிவாக்கத்தில் விபத்து பீதி கைக்கு எட்டும் மின் கம்பிகள் புழுதிவாக்கத்தில் விபத்து பீதி
கைக்கு எட்டும் மின் கம்பிகள் புழுதிவாக்கத்தில் விபத்து பீதி
கைக்கு எட்டும் மின் கம்பிகள் புழுதிவாக்கத்தில் விபத்து பீதி
கைக்கு எட்டும் மின் கம்பிகள் புழுதிவாக்கத்தில் விபத்து பீதி
ADDED : ஜூலை 12, 2024 12:25 AM

புழுதிவாக்கம், பெருங்குடி மண்டலம், புழுதிவாக்கம் சங்கரதாஸ் 2வது தெருவில், மாதாஜி ஹார்டுவேர்ஸ் கடை எதிரே, இரு மின்கம்பங்களுக்கு இடையே உள்ள மின்கம்பிகள், மிக தாழ்வாக, கைக்கு எட்டும் உயரத்தில் தொங்குகின்றன.
காற்று பலமாக வீசினால், மின்கம்பிகள் அறுந்து விழ வாய்ப்புள்ளது. இதனால் பெரும் விபத்து நிகழும் அபாயம் உள்ளது.
பகுதி மக்கள் கூறியதாவது:
இந்த மின்கம்பிகள், ஓராண்டாக தாழ்வாக தொங்குகின்றன. தவிர, மின் கம்பிகளை தாங்கி நிற்கும் மின் கம்பங்களும், சிதிலமடைந்த நிலையில் உள்ளன.
இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள், தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளில் சிக்கும் அபாயம் உள்ளது.
முப்பது ஆண்டு பழைய மின் கம்பங்களை அகற்றி புதிதாக அமைக்க வேண்டும். மின் கம்பிகளை சரியான உயரத்தில் இழுத்து கட்ட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.