/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின்மாற்றியில் துணி உலர்த்தும் வடமாநிலத்தவர்களால் அபாயம் மின்மாற்றியில் துணி உலர்த்தும் வடமாநிலத்தவர்களால் அபாயம்
மின்மாற்றியில் துணி உலர்த்தும் வடமாநிலத்தவர்களால் அபாயம்
மின்மாற்றியில் துணி உலர்த்தும் வடமாநிலத்தவர்களால் அபாயம்
மின்மாற்றியில் துணி உலர்த்தும் வடமாநிலத்தவர்களால் அபாயம்
ADDED : ஜூன் 26, 2024 12:23 AM

சேத்துப்பட்டு, வடமாநிலத்தவர்கள் ஆபத்தை உணராமல், உயரழுத்த மின்மாற்றியில் துணிகளை காய வைப்பதால், விபத்து அபாயம் நிலவுகிறது.
சென்னை, அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் சேத்துப்பட்டு, எம்.சி.நிக்கோலஸ் சாலை உள்ளது. சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகில் உள்ள இச்சாலையில், சென்னையின் பல்வேறு பகுதியில் பிச்சையெடுக்கும் வடமாநில நபர்கள், சாலையோரங்களில் தங்கி வசிக்கின்றனர்.
இவர்கள் ஆபத்தை உணராமல், அங்குள்ள உயரழுத்த மின்மாற்றியில், ஈரத் துணிகளை காய வைக்கின்றனர். இதனால், மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இதுகுறித்து அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறுகையில்,'வடமாநிலத்தவர்கள் சட்டவிரோதமாக சாலையோரத்தில் தங்கி, மின் மாற்றியில் துணிகளை காய வைக்கின்றனர்.
இதுதொடர்பாக, மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். அவர்களை அப்புறப்படுத்தி, அருகில் உள்ள மாநகராட்சியின் தங்கும் விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றனர்.