சேதமடைந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி
சேதமடைந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி
சேதமடைந்த சாலை வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூலை 18, 2024 12:17 AM

குன்றத்துார் அருகே கொல்லச்சேரியில் இருந்து மலையம்பாக்கம் செல்லும் சாலை உள்ளது. இந்த வழியே ஏராளமான வாகன ஓட்டிகள் சென்று வெளிவட்ட சாலையை பிடித்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
அதிக போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், 28, குன்றத்துார்