Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கஞ்சா கடத்திய பெண் தாதா கைது

கஞ்சா கடத்திய பெண் தாதா கைது

கஞ்சா கடத்திய பெண் தாதா கைது

கஞ்சா கடத்திய பெண் தாதா கைது

ADDED : ஜூன் 10, 2024 02:14 AM


Google News
Latest Tamil News
சென்னை:சென்னையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தனிப்படை போலீசார் சென்னையின் பல்வேறு இடங்களில் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு, மூன்று பெண்கள் உட்பட, 8 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து, 17.29 லட்சம் ரூபாய் மற்றும் 12 கிலோ கஞ்சா, எடை மற்றும் பார்சல் இயந்திரம், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

கைதான நபர்களில், புரசைவாக்கம் தாண்டவம் தெருவைச் சேர்ந்த உஷா, 41, புளியந்தோப்பு மியா என்ற ஆனந்தவள்ளி, 36, ஆகியோர் தாதா போல செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

அவர்கள் மீது, கஞ்சா கடத்தல் தொடர்பாக, 15 வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களின் கூட்டாளிகள் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us