/உள்ளூர் செய்திகள்/சென்னை/ டி.ஏ.ஏ.ஐ., தென்மண்டல பொறுப்பாளர்கள் தேர்வு டி.ஏ.ஏ.ஐ., தென்மண்டல பொறுப்பாளர்கள் தேர்வு
டி.ஏ.ஏ.ஐ., தென்மண்டல பொறுப்பாளர்கள் தேர்வு
டி.ஏ.ஏ.ஐ., தென்மண்டல பொறுப்பாளர்கள் தேர்வு
டி.ஏ.ஏ.ஐ., தென்மண்டல பொறுப்பாளர்கள் தேர்வு
ADDED : ஜூலை 29, 2024 02:35 AM

சென்னை:டி.ஏ.ஏ.ஐ., எனும் டிராவல் ஏஜன்ட் அசோசியேஷன் ஆப் இந்தியா, நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா அமைப்பாகும்.
இது பயண முகவர் நிறுவனங்களின் ஆர்வத்தை மட்டுமல்ல, சுற்றுலாத் துறையின் மற்ற பிரிவுகளான டூர் ஆப்பரேட்டர்கள், ஹோட்டல்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்கள், உல்லாசப் பயணம் போன்றவற்றையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
இந்த சங்கத்தின் பொறுப்பாளர் தேர்வு சமீபத்தில் நடந்தது. இதன், தென்மண்டல ஆண்டு பொதுக்குழு, தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இதில், 2024- - 26 ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
தென் மண்டல தலைவராக 'ஆவோசெட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்' தேவகி தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டார்.
'பாக்யா டிராவல்ஸ் அண்ட் டூர்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த கே.பாபு செயலராகவும், 'டிராவல்ஸ் என் மோர்' நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.ஜெயசேகரன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர்.