Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தேசிய நெடுஞ்சாலையில் உறங்கும் மாடுகளால் அவதி

தேசிய நெடுஞ்சாலையில் உறங்கும் மாடுகளால் அவதி

தேசிய நெடுஞ்சாலையில் உறங்கும் மாடுகளால் அவதி

தேசிய நெடுஞ்சாலையில் உறங்கும் மாடுகளால் அவதி

ADDED : ஜூன் 17, 2024 02:18 AM


Google News
Latest Tamil News
பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் படுத்து உறங்கும் மாடுகளால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், வரதராஜபுரம் ஆகிய ஊராட்சி பகுதியில், பசு மாடுகளை வளர்ப்பவர்கள், தங்களது மாடுகளை பகல், இரவு நேரத்தில் வீட்டில் கட்டி வைப்பதில்லை.

இதனால், மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்து படுத்து உறங்குகின்றன.

வாகனங்கள் 'ஹாரன்' அடித்தாலும், மாடுகள் கலைந்து செல்வதில்லை. 'பைக்'கில் செல்வோர் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர்.

நெடுஞ்சாலையில் படுத்து உறக்கும் மாடுகளை பிடித்து, காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும். மாட்டின் உரிமையாளர்களுக்கு அதிக அளவில் அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us