/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கள்ளச்சாராய கெடுபிடி டேங்கர் லாரிகள் சோதனை கள்ளச்சாராய கெடுபிடி டேங்கர் லாரிகள் சோதனை
கள்ளச்சாராய கெடுபிடி டேங்கர் லாரிகள் சோதனை
கள்ளச்சாராய கெடுபிடி டேங்கர் லாரிகள் சோதனை
கள்ளச்சாராய கெடுபிடி டேங்கர் லாரிகள் சோதனை
ADDED : ஜூன் 26, 2024 12:29 AM

கும்மிடிப்பூண்டி, கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய உயிரிழப்பு எதிரொலியாக மெத்தனால் பயன்பாடு மீதான கெடுபிடிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. கும்மிடிப்பூண்டி பகுதியில் மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் போலீசார் தீவிர ஆய்வு செய்தனர்.
பிற மாநிலங்களில் இருந்து ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்திற்குள் வரும் டேங்கர் லாரிகளை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை - - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், ஆந்திர எல்லையோர தமிழக சோதனைச்சாவடி அமைந்துள்ளது.
இந்த சோதனைச்சாவடி வழியாக தமிழகத்திற்குள் வரும் டேங்கர் லாரியில் மெத்தனால், எத்தனால், கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை ஏற்றி வரப்படுகின்றன.
நேற்று, 15க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளை சோதனையிட்ட போலீசார், அவற்றின் ஆவணங்களை சரி பார்த்து, அவை சென்று சேரும் இடத்தை உறுதி செய்தபின் தமிழகத்திற்குள் அனுமதித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 22 தொழிற்சாலைகளில் மெத்தனால், எத்தனால் ஆகிய மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதை கண்காணிக்க வருவாய் கோட்டாட்சியர்கள், சப்- - கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
கள்ளச்சாராயம் விற்பனை செய்வோர், சில்லரை வியாபாரிகள் குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் வாயிலாக ரகசிய தகவல்களை பெற்று தாசில்தார், போலீசாருக்கு பகிர வேண்டும். இதை கலெக்டருக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முழுமையாக ஒழிக்க இக்குழுவை அமைத்து, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.