/உள்ளூர் செய்திகள்/சென்னை/ லிப்ட் விழுந்து ஊழியர் பலி ஒப்பந்ததாரர், இன்ஜி., கைது லிப்ட் விழுந்து ஊழியர் பலி ஒப்பந்ததாரர், இன்ஜி., கைது
லிப்ட் விழுந்து ஊழியர் பலி ஒப்பந்ததாரர், இன்ஜி., கைது
லிப்ட் விழுந்து ஊழியர் பலி ஒப்பந்ததாரர், இன்ஜி., கைது
லிப்ட் விழுந்து ஊழியர் பலி ஒப்பந்ததாரர், இன்ஜி., கைது
ADDED : மார் 13, 2025 11:37 PM
சென்னை,பெரம்பூரைச் சேர்ந்தவர் ஷியாம்சுந்தர், 35; 'லிப்ட்' எனும் மின் துாக்கி பழுது பார்ப்பவர்.
நேற்று முன்தினம் மாலை, தேனாம்பேட்டையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் மின்துாக்கி பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
கீழ் தளத்தில் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது, முதல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்துாக்கி, திடீரென அறுந்து கீழே விழுந்ததில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தேனாம்பேட்டை போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, போலீசார் விசாரித்தனர். இதில், அஜாக்கிரதையாக செயல்பட்டு, பிறருக்கு மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் ஹோட்டல் தலைமை பொறியாளர் காமராஜ், 49, ஒப்பந்ததாரர் அப்துல் காதர், 57, ஆகிய இருவரையும் நேற்று, கைது செய்தனர்.