/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காரப்பாக்கம் வார்டு அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதில் இழுபறி நீடிப்பு காரப்பாக்கம் வார்டு அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதில் இழுபறி நீடிப்பு
காரப்பாக்கம் வார்டு அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதில் இழுபறி நீடிப்பு
காரப்பாக்கம் வார்டு அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதில் இழுபறி நீடிப்பு
காரப்பாக்கம் வார்டு அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதில் இழுபறி நீடிப்பு
ADDED : ஜூலை 27, 2024 12:46 AM

காரப்பாக்கம், சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் வார்டு அலுவலகம் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இந்த அலுவலகம் கட்டப்பட்டது.
தற்போது, சாலை மட்டத்தைவிட 5 அடி பள்ளத்தில் உள்ளது. ஒவ்வொரு பருவமழைக்கும், வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படுகிறது. பல ஆவணங்கள் நனைந்து சேதமடைந்துள்ளன.
புதிய அலுவலகம் கட்ட, 1.35 கோடி ரூபாயை, மாநகராட்சி ஒதுக்கியது. பொறியியல், வரி வசூல், சுகாதாரம், கவுன்சிலர் அலுவலகம் உள்ளிட்ட வசதியுடன், 5,600 சதுர அடி பரப்பில், கட்டுமான பணி மார்ச் மாதம் துவங்கியது.
பருவ மழைக்கு முன் பணியை முடிக்க வேண்டும் என, ஆதித்யா கட்டுமான நிறுவனத்திடம், மாநகராட்சி வலியுறுத்தியது. தரை பலப்படுத்திய நிலையுடன், பணி கிடப்பில் போடப்பட்டது.
இதனால், இந்த ஆண்டு பருவமழைக்கும், அலுவலகங்களில் வெள்ளம் புகுந்து ஆவணங்கள் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பணியை விரைந்து முடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊழியர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மழை பாதிப்பை கருத்தில் கொண்டு, பணியை வேகமாக முடிக்க வேண்டும் என, கட்டுமான நிறுவனத்திடம் வலியுறுத்தினோம். அவர்கள், அவ்வாறு செய்யாததால் பணி நிறுத்தப்பட்டது. இது குறித்து உயர் அதிகாரிகளிடம் அறிக்கை அனுப்பி உள்ளோம். இதே நிறுவனத்தை தொடர்வதா அல்லது வேறு நிறுவனத்திற்கு மாற்றுவதா என, அதிகாரிகள் முடிவு செய்வர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.