/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அதிக அளவில் நிறுத்தப்படும் வாகனங்கள் பாண்டி பஜாரில் கட்டணம் ரத்தால் நெரிசல் அதிக அளவில் நிறுத்தப்படும் வாகனங்கள் பாண்டி பஜாரில் கட்டணம் ரத்தால் நெரிசல்
அதிக அளவில் நிறுத்தப்படும் வாகனங்கள் பாண்டி பஜாரில் கட்டணம் ரத்தால் நெரிசல்
அதிக அளவில் நிறுத்தப்படும் வாகனங்கள் பாண்டி பஜாரில் கட்டணம் ரத்தால் நெரிசல்
அதிக அளவில் நிறுத்தப்படும் வாகனங்கள் பாண்டி பஜாரில் கட்டணம் ரத்தால் நெரிசல்
ADDED : ஜூன் 18, 2024 12:30 AM

பாண்டி பஜார், 'பார்க்கிங்' கட்டணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தி.நகர், தியாகராயர் சாலையில் அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
சென்னையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பாண்டிபஜார், தியாகராயர் சாலை நவீனமாக்கப்பட்டு, சாலையின் இருபுறமும், தலா 8 அடிக்கு வாகன நிறுத்தம் அனுமதிக்கப்பட்டது.
இதன்படி, தனியார் ஒப்பந்த நிறுவனம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டது. வசூலில் குறியாக இருந்த தனியார் நிறுவனம் வாகனங்களை ஒழுங்கின்றி அதிக அளவில் நிறுத்த அனுமதித்தது.
நடைபாதை, சாலையோரம், 'நோ பார்க்கிங்' பகுதிகளிலும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
தற்போது, தியாகராயர் சாலையோரம் அனுமதிக்கப்பட்ட வாகன நிறுத்தம் ரத்து செய்யப்பட்டு, மறு அறிவிப்பு வரும் வரை இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இப்பகுதியில் அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், கடும் நெரிசல் நிலவி வருகிறது.
எனவே, 'பார்க்கிங்' ரத்து செய்யப்பட்ட இடத்தில், அதிக அளவிலான வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க, போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பார்க்கிங் கட்டணம் ரத்து செய்யப்பட்டதால், இப்பகுதியில் அதிக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதை கண்காணிக்க வேண்டிய பாண்டி பஜார் போக்குவரத்து காவல் நிலையத்தில், ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால், தியாகராயர் சாலையில் உள்ள இணைப்பு சாலைகள் அனைத்தும், வாகன நிறுத்தமாக மாறி உள்ளன.
தியாகராயர் சாலையோரம் 'நோ பார்க்கிங்'கில் நிறுத்தப்படும் வாகனங்கள், ஒரு வழிப்பாதையில் அத்துமீறும் வாகனங்களை கண்காணித்து, போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.