Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இளம்பெண் குளிப்பதை போட்டோ எடுத்ததாக புகார்

இளம்பெண் குளிப்பதை போட்டோ எடுத்ததாக புகார்

இளம்பெண் குளிப்பதை போட்டோ எடுத்ததாக புகார்

இளம்பெண் குளிப்பதை போட்டோ எடுத்ததாக புகார்

ADDED : ஜூன் 26, 2024 12:24 AM


Google News
அசோக் நகர், இளம்பெண் குளிக்கும் போது, மொபைல்போனில் புகைப்படம் எடுத்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 25 வயது பெண், தன் கணவருடன் அப்பகுதியிலுள்ள வீட்டின் மூன்றாவது தளத்தில் வசித்து வருகிறார்.

கடந்த 22ம் தேதி, அப்பெண் குளியல் அறையில் குளிக்கச் சென்றார். அப்போது, அதே குடியிருப்பின் மொட்டை மாடியில் மது அருந்திய ஹரிஹரன், 32, மற்றும் ரமேஷ் குமார், 45, ஆகியோர், அப்பெண் குளிப்பதை மொபைல்போனில் படம் பிடித்துள்ளனர்.

இதைக் கண்டு அப்பெண் கூச்சலிடவே, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து நேற்று, அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us