/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாணவர்களை லோடுமேனாக்கிய தலைமை ஆசிரியர் மீது புகார் மாணவர்களை லோடுமேனாக்கிய தலைமை ஆசிரியர் மீது புகார்
மாணவர்களை லோடுமேனாக்கிய தலைமை ஆசிரியர் மீது புகார்
மாணவர்களை லோடுமேனாக்கிய தலைமை ஆசிரியர் மீது புகார்
மாணவர்களை லோடுமேனாக்கிய தலைமை ஆசிரியர் மீது புகார்
ADDED : ஜூன் 03, 2024 01:28 AM
எம்.ஜி.ஆர்., நகர்:எம்.ஜி.ஆர்., நகர் கோவிந்தசாமி சாலையில், சென்னை மாநகராட்சி உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் ஆகாஷ்குமார், பாலகுரு, செல்வதுறை ஆகியோர், கடந்த மே 31ம் தேதி பள்ளிக்குச் சென்றனர்.
இதில், தமிழ்மணி, பாலகுரு ஆகியோர், 10ம் வகுப்பு முடித்து, 'டிப்ளமா' படிக்க, தலைமை ஆசிரியரிடம் 'போனபைட்' சான்றிதழ் கேட்டுள்ளனர்.
அப்போது, அப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமதாஸ், இந்த மாணவர்களை சிந்தாதிரிப்பேட்டைக்கு அனுப்பி உள்ளார். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பாடப்புத்தகங்களை, லோடுவேனில் ஏற்றி வரும்படி கூறியுள்ளார்.
சிந்தாதிரிப்பேட்டை சென்ற மாணவர்கள், இரண்டு டன் புத்தகங்களை, இரண்டு லோடு வேனில் ஏற்றியுள்ளனர்.
பின், மாலை பள்ளிக்கு வந்து, இந்த மாணவர்களை வைத்தே, அனைத்து புத்தகங்களையும் பள்ளியில் இறக்கி வைத்துள்ளார்.
காலை முதல் மாலை வரை மாணவர்களை லோடுமேனாக பயன்படுத்தியும், அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையறிந்த பெற்றோர், தலைமை ஆசிரியரிடம் இச்சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர், 'மாணவர்களை படிக்கவிடாமல், எதிர்காலத்தை நாசம் செய்து விடுவேன்' என மிரட்டியுள்ளார்.
இதுசம்பந்தமான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள், எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதில், பாதிக்கப்பட்ட ஆகாஷ்குமார் என்ற மாணவர், பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.