/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வட்டியுடன் இழப்பீடு: நிறுவனத்துக்கு உத்தரவு வட்டியுடன் இழப்பீடு: நிறுவனத்துக்கு உத்தரவு
வட்டியுடன் இழப்பீடு: நிறுவனத்துக்கு உத்தரவு
வட்டியுடன் இழப்பீடு: நிறுவனத்துக்கு உத்தரவு
வட்டியுடன் இழப்பீடு: நிறுவனத்துக்கு உத்தரவு
ADDED : ஜூன் 10, 2024 02:02 AM
சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, போந்துார் கிராமத்தில், 'மார்க் பிராப்பர்ட்டீஸ்' நிறுவனம் 'மார்க் பிருந்தாவன்' என்ற பெயரில் குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்தியது. அதில், 21.89 லட்சத்தில் வீடு வாங்க, உதயகுமார் என்பவர், 2013ல் ஒப்பந்தம் செய்தார்.
இதன் அடிப்படையில், அவர், 14.92 லட்சம் ரூபாயை கட்டுமான நிறுவனத்துக்கு செலுத்தினார். இது தொடர்பான பத்திரப்பதிவு பணிகள், 2014ல் முடிக்கப்பட்டன.
ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட காலத்துக்குள், கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உதயகுமார், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தார்.
ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினர் சுனில் குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி வேலைகளை முடித்து, கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்காதது உறுதியாகி உள்ளது. எனவே, மனுதாரரிடம் இருந்து வசூலித்த, 14.92 லட்சம் ரூபாயை கட்டுமான நிறுவனம் வட்டியுடன் திருப்பித்தர வேண்டும்.
மேலும், வழக்கு செலவுக்காக, 25,000 ரூபாயை மனுதாரருக்கு, கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும். மேலும், இது தொடர்பான ஒப்பந்தம், பத்திரங்களை ரத்து செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.