/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பூங்காக்கள் சீரமைக்கும் பணி துவக்கம் பூங்காக்கள் சீரமைக்கும் பணி துவக்கம்
பூங்காக்கள் சீரமைக்கும் பணி துவக்கம்
பூங்காக்கள் சீரமைக்கும் பணி துவக்கம்
பூங்காக்கள் சீரமைக்கும் பணி துவக்கம்
ADDED : ஜூன் 20, 2024 12:30 AM

திருவேற்காடு, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில், பல லட்சம் ரூபாய் மதிப்பீடில் 23 பூங்காக்கள் உள்ளன. கடந்த 2021க்கு பின், பூங்காக்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டியும், விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தும் காட்சியளித்தன.
குறிப்பாக, திருவேற்காடு, சுந்தரசோழபுரம், பால கிருஷ்ணா நகரில் உள்ள பூங்கா, கோலடி சாலையில் உள்ள பாரதி நகர் பூங்கா மற்றும் சூர்ய நாராயணன் நகரில் உள்ள சூர்ய நாராயணன் பூங்காக்கள் குறித்து, நேற்று முன்தினம் நம் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, நேற்று காலை ஆவடி எம்.எல்.ஏ., நாசர் தலைமையில், திருவேற்காடு நகராட்சி கமிஷனர் கணேசன், தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள், சுந்தர சோழபுரத்தில் உள்ள பால கிருஷ்ணா நகர் பூங்காவை பார்வையிட்டனர்.
தொடர்ந்து, பூங்காவில் பக்கவாட்டு சுற்றுச்சுவர் உடைத்து, இரண்டு 'பொக்லைன்' வாகனம் உதவியுடன் பூங்காவில் வளர்ந்திருந்த புதர்களை அழித்தனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
நகராட்சியில் உள்ள பூங்காக்களை பராமரிக்க ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி இதற்கான 'டெண்டர்' விடப்படுகிறது. தேர்தல் நடத்தை விதியால், பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
தற்போது ஒவ்வொரு பூங்காவாக சுத்தம் செய்யும் பணிகள் துவங்கி உள்ளோம். மொத்தம் 57 லட்சம் ரூபாய் மதிப்பில், 14 பூங்காக்களை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.