/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உடைந்து விழுந்த தடுப்பு சுவரால் கடற்கரை செல்வோருக்கு சிரமம் உடைந்து விழுந்த தடுப்பு சுவரால் கடற்கரை செல்வோருக்கு சிரமம்
உடைந்து விழுந்த தடுப்பு சுவரால் கடற்கரை செல்வோருக்கு சிரமம்
உடைந்து விழுந்த தடுப்பு சுவரால் கடற்கரை செல்வோருக்கு சிரமம்
உடைந்து விழுந்த தடுப்பு சுவரால் கடற்கரை செல்வோருக்கு சிரமம்
ADDED : ஜூன் 03, 2024 02:16 AM

உத்தண்டி:சோழிங்கநல்லுார் மண்டலம், 197வது வார்டு, உத்தண்டி, சீசோர் அவென்யூ சாலை, கடற்கரையுடன் முடிகிறது. சாலை முடியும் இடத்தில், மணல் பரப்பு என்பதால், கருங்கற்களால் தடுப்பு அமைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பருவ மழையின்போது, பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், தடுப்பை பெயர்த்து சென்றது.
இதில், அருகில் உள்ள வீடுகள் மற்றும் அரசு நிறுவனங்களின் தடுப்பு சுவர்களும் பெயர்ந்து விழுந்தன.
ஆறு மாதங்களாகியும், சாலை முடியும் இடத்தை சீரமைக்கவில்லை. அங்கு, தெருவிளக்கு இல்லாததால், இரவு நேரத்தில் அந்த வழியாக கடற்கரைக்கு வாகனங்களிலும், பாதசாரிகளாகவும் செல்வோர் தடுக்கி விழுந்து காயமடைகின்றனர்.
அதே தெருவில், கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. தடுப்பு சுவர் விழுந்ததால், அந்த பணியும் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.
சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.