/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இணங்க மறுத்த மாணவியை வெட்டிய சித்தப்பா தற்கொலை இணங்க மறுத்த மாணவியை வெட்டிய சித்தப்பா தற்கொலை
இணங்க மறுத்த மாணவியை வெட்டிய சித்தப்பா தற்கொலை
இணங்க மறுத்த மாணவியை வெட்டிய சித்தப்பா தற்கொலை
இணங்க மறுத்த மாணவியை வெட்டிய சித்தப்பா தற்கொலை
ADDED : ஜூலை 20, 2024 01:00 AM
மதுரவாயல்:திருவண்ணாமலையைச் சேர்ந்த கட்டட தொழிலாளியின், 20 வயது மகளுக்கு சென்னை, மதுரவாயலில் உள்ள கல்லுாரியில் படிக்க இடம் கிடைத்தது.
விடுதியில் தங்கி படிக்க போதிய வசதி இல்லாததால், சித்தி முறை உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.
அப்போது, சித்தியின் 45 வயது கணவருக்கு மாணவியின் மீது விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது.
மாணவியின் வசதியின்மையை பயன்படுத்தி, வலுக்கட்டாயமாக அவரிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை அறிந்த மாணவியின் சித்தி, கணவரை கண்டித்ததுடன் மாணவியை விடுதியில் தங்கி, படிக்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிலையில், மாணவி நேற்று முன்தினம் இரவு கணினி வகுப்பிற்கு சென்று, இரவு விடுதிக்கு திரும்பி உள்ளார். அப்போது, சித்தியின் கணவர் அங்கு வந்து வழிமறித்துள்ளார்.
'தன்னிடம் பேசும்படியும், வேறு யாருடனும் பேசக்கூடாது' எனவும் வற்புறுத்தி உள்ளார். இதற்கு, மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆத்திரமடைந்த சித்தப்பா, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கையில் வெட்டி உள்ளார்.
மாணவி வலியாலும் பயத்தாலும் அலறவே, அப்பகுதிமக்கள் அங்கு குவிந்தனர், இதை பார்த்ததும் 'காமுக' நபர், தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டார்; இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிரிழந்தார். சம்பவம் குறித்து, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.