/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னை பல்கலை, ஜேப்பியார் பால் பேட்மின்டனில் அபாரம் சென்னை பல்கலை, ஜேப்பியார் பால் பேட்மின்டனில் அபாரம்
சென்னை பல்கலை, ஜேப்பியார் பால் பேட்மின்டனில் அபாரம்
சென்னை பல்கலை, ஜேப்பியார் பால் பேட்மின்டனில் அபாரம்
சென்னை பல்கலை, ஜேப்பியார் பால் பேட்மின்டனில் அபாரம்
ADDED : ஜூன் 02, 2024 12:28 AM

சென்னை, அகில இந்திய பால் பேட்மின்டன் போட்டியில், சென்னை பல்கலை, ஜேப்பியார் பல்கலை அணிகள் வெற்றி பெற்றன.
இந்திய பல்கலை சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஜேப்பியார் பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான பால் பேட்மின்டன் போட்டி, ஓ.எம்.ஆர்.,ரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடந்து வருகிறது.
போட்டியில், சென்னை பல்கலை, ஜேப்பியார் பல்கலை உட்பட 72 பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று காலை நடந்த, 'நாக் அவுட்' போட்டியில், சென்னை பல்கலை அணி, 35 - 11, 35 - 17 என்ற கணக்கில் ஆந்திராவின் தாவங்கரே பல்கலை அணியை தோற்கடித்தது.
மற்றொரு போட்டியில், அண்ணாமலை பல்கலை அணி, 35 - 17, 35 - 20 என்ற கணக்கில் கேலடி சிவப்பா நாயக்கா பலகையை வீழ்த்தியது.
கர்நாடகா பல்கலை அணி, 35 - 28, 36 - 34 என்ற கணக்கில், பாகல்பூர் பல்கலையையும், ஜேப்பியார் பல்கலை அணி, 35 - 12, 35 - 16 என்ற கணக்கில் பாபா அமராவதி பல்கலை அணியையும் தோற்கடித்தது வெற்றி பெற்றன.