/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநில ஓபன் குத்துச்சண்டையில் சென்னை சிறுவர்கள் அசத்தல் மாநில ஓபன் குத்துச்சண்டையில் சென்னை சிறுவர்கள் அசத்தல்
மாநில ஓபன் குத்துச்சண்டையில் சென்னை சிறுவர்கள் அசத்தல்
மாநில ஓபன் குத்துச்சண்டையில் சென்னை சிறுவர்கள் அசத்தல்
மாநில ஓபன் குத்துச்சண்டையில் சென்னை சிறுவர்கள் அசத்தல்
ADDED : ஜூலை 07, 2024 12:12 AM

சென்னை, தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் மற்றும் சென்னை அமெச்சூர் குத்துச்சண்டை சங்கம் இணைந்து, மாநில ஓபன் குத்துச்சண்டை போட்டியை, சென்னையில் நான்கு நாட்கள் நடத்தின.
சப் - ஜூனியர், ஜூனியர், யூத் மற்றும் சீனியரில் பல்வேறு பிரிவுகளில், தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. 7 முதல் 11 வயது வரை சிறுவர்களுக்கான 'கப் பாக்சிங்' என்ற தனிப்பிரிவு போட்டியும் நடந்தது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 500 சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர்.
அனைத்து போட்டிகள் முடிவில், விழுப்புரம், விருதுநகர், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்ட அணிகள், பல்வேறு பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்தன.
இதில், சென்னை எஸ்.டி.ஏ.டி., நேரு பார்க் காம்ப்ளக்ஸில் பயிற்சி பெறும் சிறுவர்கள் பல்வேறு பிரிவில் பதக்கம் வென்று அசத்தினர்.
கப் பாக்சிங்- பிரிவில் டார்வின், லோஹித், சித்தான்ஸ் சோப்ரா, சுபவேலன் ஆகியோர் தங்கமும், தணிகைவேல் வெள்ளி பதக்கமும் வென்றனர்.
சப் - ஜூனியரில் தங்கரத்தினம், டெல்வின் ஆகியோர் வெண்கலம்; ஜூனியரில் கோகுல் தங்கமும், ரூஜோமார்க் வெள்ளியும் மற்றும் கணபதி, லிங்கேஷ், ரூபன் ஆகியோர் வெண்கல பதக்கங்களும் வென்றனர். 'யூத்' பிரிவில் பர்விஷ், பிரவீன் வெண்கல பதக்கங்களை வென்றனர்.