/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை விமான நிலையம்
இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை விமான நிலையம்
இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை விமான நிலையம்
இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை விமான நிலையம்
ADDED : ஜூலை 21, 2024 01:30 AM

சென்னை:அமெரிக்காவைச் சேர்ந்த 'கிரவுட் ஸ்ட்ரைக்' நிறுவனம், மைக்ரோசாப்ட், கூகுள் ஆகிய நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது.
நேற்று முன்தினம், கிரவுட் ஸ்ட்ரைக் நிறுவனத்தின் சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 'விண்டோஸ் 10 - 11' இயங்குதளத்தை வெகுவாக பாதித்தது.
இதனால், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விமானம், வர்த்தகம், ஐ.டி., துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் சென்னை, டில்லி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களின் கவுன்டர்களில், கணினி செயல்பாடு முடங்கியது.
இதையடுத்து பயணியருக்கு 'போர்டிங் பாஸ்' வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டு, கைகளால் எழுதி தரப்பட்டது. இதனால் பயணியர், நீண்டநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
நேற்று முன்தினம், சென்னையில் 90 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், நேற்று பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, சென்னை விமானத்தில் வழக்கம்போல் கணினி வாயிலாக போர்டிங் பாஸ் வழங்கப்பட்டது. இதனால், பயணியர் நிம்மதி அடைந்தனர்.
இந்தியாவில் பெரும்பாலான விமான நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருளையே பயன்படுத்தி வருகின்றன.
'இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர், ஏர் இந்தியா' நிறுவனங்களின் கணினி முற்றிலும் பாதிக்கப்பட்டதால், பல இடங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
நேற்று, சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய, வர வேண்டிய, 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.