/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பழவேற்காடில் மீனவர் மோதல் 10 பேர் மீது வழக்கு பழவேற்காடில் மீனவர் மோதல் 10 பேர் மீது வழக்கு
பழவேற்காடில் மீனவர் மோதல் 10 பேர் மீது வழக்கு
பழவேற்காடில் மீனவர் மோதல் 10 பேர் மீது வழக்கு
பழவேற்காடில் மீனவர் மோதல் 10 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 07, 2024 12:29 AM
பழவேற்காடு,பழவேற்காடு கடல் பகுதியில், நேற்று முன்தினம், கடலுக்கு சென்ற பழவேற்காடு கூனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், அங்கு கட்டுப்பாடுகளை மீறி, விசைப்படகுகளுடன் மீன்பிடித்த வெளிமாவட்ட மீனவர்களை கண்டனர். விசைப்படகுகளில் இருந்த மீனவர்களிடம் கேட்டபோது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், பழவேற்காடு மீனவர்கள் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக புதுச்சேரி கீழக்கரையைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 10 பேர் மீது திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.