/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கார் ஓட்டிய போதை போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் கார் ஓட்டிய போதை போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்
கார் ஓட்டிய போதை போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்
கார் ஓட்டிய போதை போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்
கார் ஓட்டிய போதை போலீஸ் ஆயுதப்படைக்கு மாற்றம்
ADDED : ஜூன் 04, 2024 12:33 AM
தாம்பரம், தாம்பரம் அடுத்த குன்றத்துாரைச் சேர்ந்தவர் விக்னேஷ்; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 1ம் தேதி இரவு, தாம்பரம் - முடிச்சூர் சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது, கார் ஒன்று, அவரது வாகனத்தை மோதுவது போல் வந்துள்ளது. சுதாரித்துக்கொண்ட விக்னேஷ், விலகி சென்றதால் விபத்து ஏற்படவில்லை.
அவரது இருசக்கர வாகனத்தை கடந்து தாறுமாறாக சென்ற கார், முன் சென்ற சில வாகனங்களில் இடித்ததாக கூறப்படுகிறது.
வாகன ஓட்டிகள் சேர்ந்து, அந்த காரை விரட்டி பிடித்தபோது, காரை ஓட்டி வந்த நபர் போலீஸ்காரர் ஸ்ரீராமதுரை என்பதும், அவர் போதையில் இருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பான, வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த நிலையில், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஸ்ரீராமதுரை, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.