/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'பயிலிங் ரிக்' இயந்திரம் வாயிலாக தி.நகர் மேம்பாலத்திற்கு கடைக்கால் 'பயிலிங் ரிக்' இயந்திரம் வாயிலாக தி.நகர் மேம்பாலத்திற்கு கடைக்கால்
'பயிலிங் ரிக்' இயந்திரம் வாயிலாக தி.நகர் மேம்பாலத்திற்கு கடைக்கால்
'பயிலிங் ரிக்' இயந்திரம் வாயிலாக தி.நகர் மேம்பாலத்திற்கு கடைக்கால்
'பயிலிங் ரிக்' இயந்திரம் வாயிலாக தி.நகர் மேம்பாலத்திற்கு கடைக்கால்
ADDED : ஜூன் 01, 2024 12:34 AM

தி.நகர், தி.நகரில் உஸ்மான் சாலை பழைய மேம்பாலத்துடன் புது மேம்பாலம் இணைக்கும் பணி நடந்து வரும் நிலையில், மேம்பாலத்தில் பேருந்துகள் ஏற சாய்தளம் அமைக்க, 'பயிலிங் ரிக்' என்ற இயந்திரம் வாயிலாக, ஆழ்துளை கடைக்கால் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை வரை, புதிய மேம்பாலம் அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டது. கடந்த 2023 மார்ச்சில் பணிகள் துவக்கப்பட்டன.
தி.நகர், துரைசாமி சாலை - உஸ்மான் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சாய்தளத்தை, ஜி.ஆர்.டி., ஜுவல்லரி அருகே தகர்த்து, அங்கிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக, அண்ணா சாலை சந்திப்பு வரை, 1.2 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது.
இந்த மேம்பாலம், 131 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 50 துாண்களுடன், 7.5 மீட்டர் அகலம் கொண்ட இருவழிப்பாதையாக அமைகிறது. தற்போது, பழைய மேம்பாலத்தை இடித்து, புது மேம்பாலத்துடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், தி.நகர் சிவா -விஷ்ணு கோவில் அருகே, வாகனங்கள் ஏற சாய்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக, ஆழ்துளை கடைக்கால் அமைக்க, 'பயிலிங் ரிக்' என்ற இயந்திரம் கொண்டு ஆழ்துளை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த இயந்திரம் உதவியுடன், 32 மீட்டர் ஆழத்திற்கு ஒரு மீட்டர் விட்டம் கொண்ட துளை அமைக்க முடியும். மேம்பால பணிக்காக, மொத்தம் 177 ஆழ்துளை கடைக்கால் போட வேண்டியுள்ளது.
இவற்றில், 94 ஆழ்துளை கடைக்கால் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, மாநகராட்சி மேம்பாலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.