/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கும்மிருட்டான சர்வீஸ் சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்' கும்மிருட்டான சர்வீஸ் சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
கும்மிருட்டான சர்வீஸ் சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
கும்மிருட்டான சர்வீஸ் சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
கும்மிருட்டான சர்வீஸ் சாலை வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
ADDED : ஜூலை 30, 2024 12:58 AM

தாம்பரம்- - மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் பரணிபுத்துார் முதல் தரப்பாக்கம் வரை சர்வீஸ் சாலையில் உள்ள கம்பத்தில் மின் விளக்குகள் எரிவதில்லை.
இதனால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அவ்வப்போது வழிப்பறி சம்பவங்களும் நடக்கின்றன. மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, இந்த சாலையில் மின் விளக்குகளை ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்-.
- ஏ.தினேஷ், குன்றத்துார்.