ADDED : ஜூலை 05, 2024 12:33 AM
ஜாம்பஜார், திருத்தணி, வேலஞ்சேரி ராமர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார், 43; மாநகர பேருந்து நடத்துனர்.
நேற்று முன்தினம் இரவு, '29ஏ' மாநகர பேருந்தில் பணியில் இருந்த போது, சேப்பாக்கம் பெல்ஸ் சாலையிலுள்ள அம்மன் பேருந்து நிறுத்தத்தில், நான்கு பேர் ஏறியுள்ளனர். இதில் இருவர் டிக்கெட் எடுக்காததால், நடத்துனர் குமார் டிக்கெட் எடுக்கும்படி கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த அதில் ஒருவர், பேருந்து ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பினார். புகாரின்படி, கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, ஜாம்பஜார் போலீசார் விசாரித்தனர்.
இதில் அந்த நபர், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பழைய குற்றவாளி வினோத், 24, என தெரிந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.