/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பி.எஸ்.என்.எல்., அசட்டை கேபிள் திருட்டு அமோகம் பி.எஸ்.என்.எல்., அசட்டை கேபிள் திருட்டு அமோகம்
பி.எஸ்.என்.எல்., அசட்டை கேபிள் திருட்டு அமோகம்
பி.எஸ்.என்.எல்., அசட்டை கேபிள் திருட்டு அமோகம்
பி.எஸ்.என்.எல்., அசட்டை கேபிள் திருட்டு அமோகம்
ADDED : ஜூலை 21, 2024 01:37 AM

சென்னை:புளியந்தோப்பு, அம்பேத்கர் கல்லுாரி சாலையில், வியாசர்பாடி மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
நிலத்திற்கடியில் பல மீட்டர் ஆழத்தில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் 800, 200 என்ற அளவுடைய ஜோடி காப்பர் கேபிள்கள் இருக்கின்றன. பணிகளுக்காக தோண்டப்படும் போது வெளியே வரும் காப்பர் கம்பிகளை, சிலர் திருடி வருவதாக புகார் எழுந்துள்ளது.
குறித்து முன்னாள் பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பி.எஸ்.என்.எல்., காப்பர் கேபிள்கள் நிலத்தில் இருந்து பல மீட்டர் கீழே அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் கால்வாய் கட்டுமானப் பணிகள், சாலை மேம்பாட்டு பணிகளின் போது பள்ளம் தோண்டுவது வழக்கம்.
அப்போது, காப்பர் கேபிள்கள் வெளியே வந்து விடும். பொதுவாக, இதுபோன்ற பணிகள் நடக்கும் போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையில் ஆட்களை வைத்து கண்காணிக்க வேண்டும்.
ஆனால், புளியந்தோப்பு அம்பேத்கர் சாலையில் நடந்து வரும் பணிகளில் யாரும் இருப்பது கிடையாது.
இதை பயன்படுத்தி காப்பர் கேபிள்களை கும்பல் கொள்ளையடிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் 800, 200 வகை கேபிள்கள் திருடப்பட்டுள்ளது. கண்காணிக்க ஆட்கள் இல்லாததால் தொடர் திருட்டு நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.