ADDED : ஜூன் 10, 2024 02:13 AM

குன்றத்துார்:சுங்குவார்சத்திரம் அருகே கண்ணுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சியாமளா, 22.
நேற்று டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு தமிழகம் முழுதும் நடந்தது. சியாமளாவுக்கு கதிரேசன் என்பவருடன் நேற்று காலை திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு, குன்றத்துார், புதுப்பேடு தனியார் கல்லுாரி யில் திருமண கோலத்தில் சென்று தேர்வு எழுதினார்.
அவர் தேர்வு எழுதி முடிக்கும் வரை, அவரது கணவர் கதிரேசன் வெளியே காத்திருந்து, மனைவியை அழைத்து சென்றார்.