ADDED : ஜூன் 22, 2024 12:28 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலத்தில் உள்ள நகர அமைப்பு பிரிவில் கட்டட அனுமதி பெறுவதற்கு, புரோக்கர் ஒருவர் லஞ்சம் கேட்டதாக மவுன்ட் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து டி.எஸ்.பி., பாஸ்கர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், குரோம்பேட்டை, சி.எல்.சி., ஒர்க்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே லஞ்சம் பெற்றுக்கொண்ட புரோக்கரை நேற்று பிடித்தனர்.
இவரிடம் விசாரித்தபோது, இரண்டாவது மண்டல நகரமைப்பு ஆய்வாளருக்காக லஞ்சம் வாங்கியதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.