/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போரூர் ராமச்சந்திராவில் தாய்ப்பால் வங்கி துவக்கம் போரூர் ராமச்சந்திராவில் தாய்ப்பால் வங்கி துவக்கம்
போரூர் ராமச்சந்திராவில் தாய்ப்பால் வங்கி துவக்கம்
போரூர் ராமச்சந்திராவில் தாய்ப்பால் வங்கி துவக்கம்
போரூர் ராமச்சந்திராவில் தாய்ப்பால் வங்கி துவக்கம்
ADDED : மார் 13, 2025 11:46 PM
சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனையில் தாய்ப்பால் மேலாண்மை வங்கி துவங்கப்பட்டுள்ளது.
சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், உயர் தொழில் நுட்பத்தாலான தாய்ப்பால் வங்கி துவங்கப்பட்டுள்ளது.
இவற்றை, ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், நேற்று துவக்கி வைத்தார்.
இதுகுறித்து, பச்சிளம் குழந்தைகள் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் உமாமகேஷ்வரி கூறியதாவது:
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், பிறக்கும்போது பலவீனமான குழந்தைகளை பராமரிப்பதற்கும், இவ்வங்கி உதவியாக இருக்கும்.
பிறந்த குழந்தைகளின் பெண்கள், தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில், பிற பெண்களிடம் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, குழந்தைகளுக்கு அளிக்கப்படும். இதனால், அனைத்து குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.