மாங்காடு கோவிலில் பிரம்மோற்சவ விழா
மாங்காடு கோவிலில் பிரம்மோற்சவ விழா
மாங்காடு கோவிலில் பிரம்மோற்சவ விழா
ADDED : ஜூன் 12, 2024 12:19 AM
குன்றத்துார், மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை, துவங்குகிறது.
சென்னை அருகே மாங்காட்டில் காமாட்சி அம்மன் கோவில் அருகே வெள்ளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவகிரக தலங்களில், சுக்ரன் பரிகார தலமாக விளங்கும் வெள்ளீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.
இந்தாண்டு பிரம்மோற்சவ விழா நாளை, ஜூன்13, காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதைத்தொடர்ந்து காலை, மாலையில் தினமும் ஒரு வாகனத்தில் வெள்ளீஸ்வரர் எழுந்தருளி வீதி உலா செல்ல உள்ளார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.